மசூத் அஸார் விவகாரம்:சீனாவின் முட்டுக்கட்டைக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆட்சேபம்

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் மீது ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளைக் கொண்ட ஆர்ஐசி அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு மாஸ்கோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோவுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்ற சுஷ்மா ஸ்வராஜ், அங்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஐ.நா. சபை மூலம் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அஸார் மீது நடவடிக்கை எடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்ட விவகாரத்தை சுஷ்மா ஸ்வராஜ் எழுப்பினார். அப்போது

சீனாவின் நடவடிக்கைக்கு சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவின் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.இதுதவிர்த்து, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார். கடந்த ஓராண்டில் இந்தியா-சீனா இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இதை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம் தெரிவித்தார்.இதைக் கேட்டு சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், “இந்தியாவும், சீனாவும் தங்களிடையேயான உறவை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டால், ஆசியாவுக்கும், உலகத்துக்கும் இரு நாடுகளும் முக்கிய பங்களிப்பை அளிக்க முடியும்’ என்றார்.ஐ.நா.வில் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு, கடந்த 2008ஆம் ஆண்டும், கடந்த ஆண்டு ஜூலை மாதமும் சீனா முட்டுக்கட்டை போட்டது.ரஷிய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது, தீ விபத்தில் 2 இந்திய மாணவிகள் பலியானது ஆகிய விவகாரங்களை சுஷ்மா எழுப்பினார்.இந்தியாவில் ரஷிய பெண் ஒருவர் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், அந்தப் பெண்ணுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்ததற்கு சுஷ்மாவிடம் லாவ்ரோவ் நன்றி தெரிவித்துக் கொண்டார். ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யை சந்தித்துப் பேசும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.சீன ராணுவ விமானம் சர்ச்சைக்குரிய செயற்கைத் தீவில் தரை இறக்கம்சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைத்துள்ள செயற்கைத் தீவில், அந்த நாட்டு ராணுவ விமானம் முதல் முறையாகத் தரையிறங்கியது.தென் சீனக் கடலில் அமைந்துள்ள “ஃபியரி கிராஸ்’ கடலடிப்பாறைப் பகுதி மீது சீனா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய மூன்று நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.இந்தப் பகுதியில், சர்வதேச எதிர்ப்பையும் மீறி செயற்கைத் தீவு ஒன்றை சீனா உருவாக்கியது.அதில் அமைக்கப்பட்டுள்ள 3,000 மீட்டர் நீள விமான ஓடுதளத்தில், சீனாவின் பயணிகள் விமானங்கள் தரையிறங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தகவல்கள் வெளியாகின.இந்தச் சூழலில், சீன அரசு நாளிதழ் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:ஃபியரி கிராஸ் பகுதி விமான ஓடுதளத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கியது.உடல் நலன் பாதிக்கப்பட்ட கட்டுமானப் பணியாளர்களை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்காக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.சர்ச்சைக்குரிய ஃபியரி கிராஸ் பகுதியில் ராணுவ விமானம் தரையிறக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் பல முக்கிய கடல் வாணிப வழித் தடங்களைக் கொண்டுள்ள தென் சீனக் கடல் பகுதியில், ஏராளமான நிலத்தடி எண்ணெய் வளம் இருப்பதாக நம்பப்படுகிறது.இந்தக் கடலின் ஏறத்தாழ எல்லா பகுதிகளுக்கும் சீனா உரிமை கோரி வருகிறது.இதனால் இந்தப் பகுதியில் உரிமை கொண்டாடி வரும் பிலிப்பின்ஸ், வியத்நாம், மலேசியா, புருணை, தைவான் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.————————————————————————————————————-