“எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற “ஆக்சிசன்” தான். நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.
நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி.
அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ” படத்தை பார்த்த சத்யமூர்த்தி பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.
டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தை. தயாரித்துள்ளனர்..
எடிட்டிங்….கார்த்திக் ஜோகேஷ்
தயாரிப்பு நிர்வாகம்… சதீஷ் ரகு
தயாரிப்பு..C.P.கணேஷ், சுந்தர் அண்ணாமலை
எழுதி இயக்கி இருப்பவர்….சர்ஜுன்…
இவர் யூ டியூப்பில் பிரபலமான மா,லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர்….
அத்துடன் மணிரத்னம் AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்…
இந்தப் படத்தின் சிறப்பையும் மா லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின்தயாரிப்பாளர் ராஜேஷ் நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் …
அவரிடம் படத்தை பற்றி கேட்ட போது…
இது கிரைம் திரில்லர் படம்…எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்.
ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ்
இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்..
பாடல்கள் – கபிலன்
கலை – விஜய் ஆதி நாதன்
நடனம் – விஜய்சதீஷ்..சஅனுஷாசஸ்வாமி
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்த்மாக வாங்கி ரிலீஸ் செய்கிறார் …இம்மாதம் படம் வெளியாகிறது என்றார் இயக்குனர். கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தையும் தயாரித்து முடிற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது.