16 புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘சிவ சிவா ‘ படப்பிடிப்பு தொடங்கியது

முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம் ‘சிவ சிவா’ . இப்படத்தை ரமா இயக்குகிறார். சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல் நல்லவை செய்யும் கருவியாக எண்ணிக் களத்துக்கு வரும்  இவர் ,  கதையோடு சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் இணைந்த படைப்பாக ‘சிவ சிவா’வை உருவாக்கவுள்ளார். சினிமாவுக்குத்  தேவையான காதல், நட்பு , நகைச்சுவை ஆகிய மசாலா மணத்துடன் சிந்தனைக் தூவல்களைக் கலந்து உருவாகவுள்ளது சிவ சிவா. 

படத்துக்கு ஒளிப்பதிவு ஹரிகாந்த் ,  வசனம் ‘வீடியோ ஜாக்கி’ மொக்க மகி. இப்படத்தை எஸ்.ஆர். ஜி ரிதம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார்.  இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று ஐயப்பன் தாங்கலில் நடைபெற்றது.  தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ‘ராட்டினம்’ கே.எஸ். தங்கசாமி, நடிகர் பிரதாப் சந்தீப், நடிகை எலிசபெத் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.