“அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம்

முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!

 இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட்  ரசிகர்களில் சமீர் கோச்சாரை  அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில்  வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின்  கடைக்கோடி வரை அறிந்த  பிரபலமானார் சமீர் கோச்சார்.

தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஹாத் சே ஹாத்  மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை  வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது “NETFLIX”  வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும்  “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும்  “ஜனத்”,  “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட்  வெற்றித்  திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,  “Century  International Films”  யாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்து வரும் “அதோ அந்த பறவை  போல” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார். இப்படத்தின் கதையில் அவருடைய  கதாபாத்திரத்தின்  வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம்தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம்  படக்குழுவினரை  ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார். அது மட்டுமல்லாமல்  தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.