லாவா, நேர்த்தியான புகைப்படங்களை எடுக்கும் ‘ஷார்ப் க்ளிக்’ கேமராவுடன் புதிய லாவா ’இசட் 61’ ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்திருக்கிறது!
- 18:9 ஃபுல் வியூ ஹெச்டி + திரை [18:9 Full View HD+ Display] இரண்டும்
திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை அளிக்கிறது. - 8.65ன் மிமீ அளவு தடிமனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் லாவா இசட் 61
குறைந்த எடை, அதிக ஆற்றல் கொண்ட 3000 mAH பேட்டரியுடன்
அறிமுகமாகி இருக்கிறது. - முழுவதும் திரையும் லாமினேஷன் டிஸ்ப்ளே [Full-laminationdisplay],
கோர்னிங் கொரில்லா க்ளாஸ் [Corning® Gorilla® Glass] 2.5டி வளைவான திரை
என அசத்தலாக கண்களைக் கவர்கிறது. - ஃபோன் வாங்கிய ஒரு வருடத்திற்குள் ஸ்கிரீன் பழுதடைந்தால்
ஒரேயொரு முறை இலவசமாக மாற்றும் வாய்ப்ப்பை அளிக்கிறது. - 2,200 ரூபாய் மதிப்பில் கேஷ்பேக் சலுகை, ரிலையன்ஸ் ஜியோ உடனான
செயல்பாட்டு ஒப்பந்தம் மூலம் வழங்கப்படும்.
லாவா இன்டர்நேஷனல், இன்று தனது புதிய ‘லாவா இசட் 61’ ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்திருக்கிறது. லாவா இசட் வரிசை போன்களின் ஸ்டைல், அசத்தலான வடிவமைப்பு மற்றும் அபாரமான கேமரா என அனைத்து சிறப்பம்சங்களோடு புதுமையான ‘ஷார்ப் க்ளிக்’ [‘Sharp Click’ technology] தொழில்நுட்பத்தையும் கூடுதலாக பெற்றிருக்கிறது புதிய இசட் 61 ஸ்மார்ட்ஃபோன். புதிய ஷார்ப் க்ளிக் தொழில்நுட்பம், சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மிகவும் துல்லியமாக படமெடுக்க உதவுகிறது. இதனால் அசாத்தியமான புகைப்பட அனுபவத்தை பெறமுடியும். இதன் பின்பக்க கேமரா 8 எம்பி ஆட்டோ ஃபோகஸ், முன்பக்க கேமரா 5 எம்பி ஆற்றலுடன் [திரை மற்றும்
எல்இடி ஃப்ளாஷ் உடன்] வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேம்படுத்தப்பட்ட
‘பொகே மோட்’ புகைப்படமெடுக்கும் அனுபவத்தை அடுத்தக்கட்டதிற்கு, அழைத்துச்
செல்கிறது. இதனால் லாவா இசட் 61 ஸ்மார்ட்ஃபோன் உரிமையாளர்கள் மிகச்சிறப்பான ஹை-எண்ட் புகைப்பட அனுபவத்தை பெறும் தனித்துவமான ஸ்மார்ட்ஃபோன் உரிமையாளராக பெருமை கொள்ளலாம்.
ஒரு முழுமையான ஸ்மார்ட்ஃபோன் வேண்டுமென எதிர்பார்த்திருக்கும்
வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஒரு முழுமையான ஸ்மார்ட்ஃபோனாக
அறிமுகமாகி இருக்கிறது ‘லாவா இப்பிரிவிலான ஸ்மார்ட்ஃபோன்களில் இசட் 61’.
மிகச்சிறப்பானதாக 18 : 9 முழு திரை, 1 ஜிபி ரேம், 16 ஜிமி ரோம், 3000 MaH பேட்டரி என 5,750 ரூபாய் மதிப்பில் சந்தையில் கிடைக்கிறது. இந்தியா முழுவதிலும் பரவலாக செயல்பட்டு வரும் 80,000-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் லாவா ’இசட் 61’ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. கருப்பு மற்றும் தங்க நிறம் என இரு வண்ணங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இசட் 61-ன் 2 ஜிபி ரேம் ஆற்றல் கொண்ட ஸ்மார்ட்ஃபோன், வருகிற ஆகஸ்ட் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
’லாவா இசட் 61’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுக விழாவில் பேசிய லாவா இன்டர்நேஷனல்-ன் தயாரிப்பு பிரிவின் தலைவர் திரு. கெளரவ் நிகம், [Mr. Gaurav Nigam, Head – Product, Lava International] ‘’சின்னச்சின்ன விஷயங்கள்தான் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும் என லாவா உறுதியாக நம்புகிறது. எங்களது புதிய ஸ்மார்ட்ஃபோன் ’இசட் 61’ அதற்கு ஒரு நல்ல உதாரணமாக அறிமுகமாகி இருக்கிறது. அசத்தலான தோற்றம், அட்டகாசமான செயல்திறன் இவை இரண்டும் இணையில்லாத புகைப்படமெடுக்கும் அனுபவத்துடன் சிறப்பான ஸ்மார்ட்ஃபோனுக்கான சரியான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ‘ஷார்ப் க்ளிக்’ தொழில்நுட்பம் மனதைக் கவருபவற்றை மிகத்துல்லியமாக ஹை டெஃபனிஷனில் புகைப்படமெடுக்க உதவுகிறது. மேலும் இதன் ஹெச்டி+ஸ்கிரீன்-ல் வீடியோக்களை பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும். எங்களது வாடிக்கையாளர்கள் புதிய லாவா இசட் 61 ஸ்மார்ட்ஃபோனுக்கு, இதுவரை இசட் வரிசை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கொடுத்த வரவேற்பை இன்னும் அதிகம் கொடுப்பார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.
’இசட் 61’-ன் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை சிறப்பானதாக்கி இருக்கின்றன. 5.45 அங்குல ஹெச்டி+ ஃபுல் லாமினேஷன் ஸ்கிரீன், 2.5 டி வளைவுடன், கோர்னிங் கொரிலா க்ளாஸ் உடன் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பிரிவு ஃபோன்களில் மெல்லிய தடிமன் உள்ள ஸ்மார்ட்ஃபோனாக 8.65 மிமீ தடிமனில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இசட் 61. மேலும் இதன் லேசர் ஃபினிஷ் வடிவமைப்பு மெல்லியதாகவும், ப்ரீமியம் ஸ்டைல் ஸ்மார்ட்ஃபோனுக்கான அழகையும் அளிக்கிறது.
1 ஜிபி ’இசட் 61’ ஃபோன் ஆண்ட்ராய்ட் ஒரியோ [கோ எடிஷன்]-ல் [Android™ Oreo™ (Go edition)] இயங்குகிறது. 2 ஜிபி ’இசட் 61’ ஸ்மார்ட்ஃபோன் ‘ஆண்ட்ராய்ட் 8.1 ஒரியோ [Android™ 8.1 Oreo™] இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதன் 3000 mAh பேட்டரி சிறப்பான செயல்திறனை அளிப்பதோடு, ஒரே முறை சார்ஜ் ஏற்றினால் 1.5 நாட்கள் வரை நீடிக்கிறது. மேலும் இதன் பேட்டரி ‘செயற்கை நுண்ணறிவு’-ன் ஆதரவுடன் செயல்படுகிறது. இது ஃபோனில் பேட்டரியின் பயன்பாட்டை கண்காணிப்பதுடன், இசட் 61-ஐ நீண்டநேரம் பயன்படுத்தால் அப்படியே வைத்திருந்தால், பின்னணியில் இயங்கும் செயலிகள் செயல்படுவதை நிறுத்துகிறது.
’இசட் 61’ ஸ்மார்ட்ஃபோன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மூலம் இயங்குகிறது. 1 ஜிபி / 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி நினைவகம் வாடிக்கையாளர்கள் தங்களது இசை, புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் செயலிகளையும் இதர டேடாவையும் அதிகளவில் சேமித்து பயன்படுத்த உதவுகிறது.
லாவா இசட் 61, தனது ஹோம் ஸ்கிரீனில் மொழியின் உடனடி பயன்பாட்டுக்கான [‘Language’ shortcut] வாய்ப்பை அளிக்கிறது. இது வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தங்களது ஃபோனில் சிஸ்டம் லாங்வேஜ் [system language] -ஐ தங்களுக்கு விருப்பமான தாய்மொழியில் மாற்றமுடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு ஏற்ற மொழியைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். மேலும் அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை தங்களது மொழியிலேயே படிக்க முடியும்.
’இசட் 61’, அறிமுக சிறப்பு சலுகையாக, ஒரு முறை ஸ்கிரீன் மாற்றும் வாய்ப்பையும் இலவசமாக அளிக்கிறது. இந்த ப்ரத்யேக சலுகை, செப்டெம்பர் 30-ம் தேதி 2018-க்குள் வாங்கும் லாவா இசட் 61 ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மட்டும் பொருந்தும்.
லாவா, உலகின் மிகப்பெரிய டேடா நெட்வொர்க் மற்றும் உலகத்தர ஆல் ஐபி 4ஜி எல்டிஇ நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ world-class all-IP 4G LTE network] உடன் கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் லாவாவின் 4ஜி வரிசை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ப்ரத்யேக கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது.
புதிய இசட் 61 ஸ்மார்ட்ஃபோனுடன், ஜியோ சிம் கார்ட்டை பயன்படுத்துவதன் மூலம், உடனடியாக 2,200 ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக் சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம். இச்சலுகையின் கீழ், அனைத்து இசட் 61 ஃபோன் உரிமையாளர்களும், ஓவ்வொரு வவுச்சரும் 50 ரூபாய் மதிப்புடன் இருக்கும் வகையில் 44 கேஷ்பேக் வவுச்சர்களை பெறுவார்கள். மேலும் வாடிக்கையாளர் முதல் முறையாக 198 ரூபாய் அல்லது 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்போதே இச்சலுகை வழங்கப்பட்டுவிடும். இந்த வவுச்சர்கள் அனைத்தும்’ மை ஜியோ’ செயலியில் [MyJio app] கிடைக்கும். இச்சலுகை ஏற்கனவே ஜியோ பயன்படுத்துபவர்களுக்கும், புதிதாக ஜியோவை உபயோகிக்க ஆரம்பிப்பவர்களுக்கும் பொருந்தும்.
கீழே உள்ள விவரங்கள் என்னென்ன ப்ளான்களுக்கு என்னென்ன பலன்கள்
என்பதை விவரிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான
திட்டத்தை இதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.