“எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்என்ற பெயரில்  திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்  தற்போது  மக்கள்திலகம் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில்எம்ஜிஆர்’ எனும் பெயரில்  திரைப்படமாகத் தயாரித்து வருகிறது .

இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட  நாயகன் சதிஷ் குமார் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார் . எம்ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y . G. மகேந்திரன்எம்ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகுபாய்ஸ் நாடகக் கம்பெனி  உரிமையாளராக தீனதயாளன்உயிர் தொண்டனாக  வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம்ஜி.ஆர் தனது  திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் தான் அவரது  பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதால் எம்ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப் பித்தன்கவிஞர் முத்துலிங்கம்மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப் படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர். இப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள்  இசையமைக்க உள்ளனர்.

அடுத்த வாரம் இத்திரைப்படத்தின்டீசரை’  வெளியிட உள்ளதாக  ‘எம்.ஜி.ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர்தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டில் இப்படத்தின்  படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.