கரூரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் தனியார் நிறுவனம் கொண்டு சென்ற ரூபாய் 3.25.கோடி பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.[wpdevart_youtube]xvhMcquml_0[/wpdevart_youtube]
கரூர் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி,கரூர் வைஸ்சியா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ்வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று காந்திகிராமம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் ரூபாய் 3.25- கோடி எடுத்து கொண்டு ஏ.டி.எம்-களில் நிரப்ப சென்றபோது காந்திகிராமம் பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அவர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அந்த வாகனத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரூவூலத்தில் பணத்தை ஒப்படைத்தார்.அந்தபணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அந்த நிறுவனத்தினடம் பணத்தை திரும்ப ஒப்பட்டைக்கப்படும் என கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.