சினிமாவில் நாம் பார்க்கும் சில கதாபாத்திரங்கள் நம் வீட்டிற்கு நம்முடனே வந்து விடுகின்றன. பாகுபலி படத்தில் பார்த்த பாகுபலி, பல்லா தேவா, தேவசேனா, கட்டப்பா, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரங்கள் என்றும் நம் மனதை விட்டு மறைந்து போவதில்லை. மோகன்லால், நிவின் பாலி, பிரியா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஸ்ரீகோகுலம் கோபாலன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் காயம்குளம் கொச்சூன்னி. தயாரிப்பு செலவின் அடிப்படையில் மிகப்பெரிய படமான, இந்த படத்தின் வெளியீட்டு தேதியை சினிமா வர்த்தகத்தில் அனைவரும் எதிர்நோக்கி வருகிறார்கள்.
“மிகுதியான ஆராய்ச்சி பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் பீரியட் படங்களை உருவாக்குவது என்பது எளிது. ஆனால் மிகவும் சொற்பமான குறிப்புகளை வைத்துக் கொண்டு, 30 நிமிடங்கள் அளவில் கூட சினிமாவை எடுக்க முடியாது. எனவே இதை வேறு ஒரு விதத்தில் அணுகுவது என்று முடிவு செய்தோம். முடிந்தவரை பல கேள்விகளை திரைக்கதை எழுதும்போது உருவாக்கி, திரைக்கதையை தொடர்ந்தோம்” என்றார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
“நாங்கள் படத்தின் மைய கதாபாத்திரத்தின் மீது மட்டுமே ஆய்வு செய்யாமல், சில புகழ்பெற்ற மனிதர்களை பற்றிய விஷயங்களையும் அறிந்து கொண்டோம். காயம்குளம் கொச்சூன்னி காலத்தில் வாழ்ந்த ஸ்வாதி திருநாள்மற்றும் இதிக்கார பக்கி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். சர்வதேச தரத்திலான படத்தை கொடுப்பதற்கு இந்த மாதிரியான உழைப்பு அவசியமாக வேண்டும். எங்கள் முயற்சியானது, எங்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று தரும் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் ரசிகர்களின் கற்பனைக்கு விடையாக அமைய இருக்கிறது.