காசு மேல காசு விமர்சனம்

மயில்சாமி தன் குடுமபத்துடன் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் தன் மகனுக்கு (ஹீரோ ஷாருக்) வசதியான பெண்ணை திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணின் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி பணக்காரனாக (பேராசை) வாழ வேன்டும் என்ற இலட்சியத்தில் வாழுகிறார்.

இதற்காக தன் மகன் ஷாரூக்கை அழைத்துக்கொண்டு பணக்காரர்கள் இருக்கும் தெருவை சுற்றி வருகிறார். இந்நிலையில் நளினியும், லொள்ளுசபா சாமிநாதனும் தங்களின் மகள்களை ஷாருக்குக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இதனை மறுக்கும் மயில்சாமிக்கு ஒரு பிச்சைக்கார பெண் தான் மருமகளா வருவானு சாபம் விடுகிறார் சாமிநாதன்.

இந்நிலையில் பிச்சைக்கார தம்பதிகளான கே.எஸ் பழனி, மதுமிதாவின் மகளான (காயத்திரி) பிச்சை எடுக்காமல் வேலை செய்து சம்பாரிக்க வேண்டும் என்று ஒரு பணக்கார வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அந்த பணக்கார வீட்டு பெண்ணின் துணிகளை காயத்திரி போட்டு செல்கிறார். மயில்சாமியும் காயத்திரியை பணக்கார வீட்டு பெண் என்று நினைத்து ஷாரூக்கை காயத்திரியை காதலிக்க சொல்கிறார்.

ஷாருக்கும் அப்பா சொல்வதை கேட்டு காயத்திரியை உண்மையாக காதலிக்கிறார். ஒருகட்டத்தில் காயத்திரியின் பெற்றோர் பிச்சைக்காரர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனையடுத்து ஷாருக், காயத்திரியை திருமணம் செய்துக்கொண்டாரா? இல்லையா? மயில்சாமியின் பணக்கார பேராசை கனவு நிறைவேறியதா? என்பது காசு மேல காசு படத்தின் மீதிக்கதை.

மயில்சாமி பண ஆசை பிடித்த பணமே வாழ்க்கைக்கு முக்கியம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுமிதா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப பக்காவாக கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். மதுமிதாவுக்கு நளினியும் சண்டையிட்டு கொள்ளும் காட்சியில் சிரிப்பில் அரங்கமே அதிரும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் உழைத்து வாழ வேண்டும் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ் பழனி. பல காட்சியில் காமெடியில் வயிறை வலிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு காட்சிக்கு மட்டுமே கோவைசரளா வந்தாலும் காமெடியில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறார். குடும்பத்துடன் பார்க்கும் காமெடி கருத்து படம்.

நடிகர்கள்: மயில்சாமி, ஷாரூக், காயத்ரிகோவை சரளா, நளினி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, கே.எஸ். பழனி மற்றும் பலர்.

தொழிநுட்ப கலைஞர்கள்: 
இயக்கம் – கேஎஸ். பழனி
ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன்
இசை – பாண்டியன்
தயாரிப்பு – ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன்
பாடல்கள் – கருப்பையா
பிஆர்ஓ. – ராஜ்குமார்

காசு மேல காசு “சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும்”.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்