இந்திய மருந்து தொழில்துறையினரின் ஆண்டு நிகழ்ச்சி நிரல்களில் மிகவும் முக்கியமானது பார்மா சவுத் 2018 என்ற வர்த்தகர்களுக்கு இடையிலான 4வது பார்மாசூட்டிக்கல்ஸ் பி2பி கண்காட்சியாகும். இது நான்காவது ஆண்டாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2018, ஜூலை 6 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், ஆர்பிட் எக்ஸிபிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘ மருந்து உற்பத்தி, மார்க்கெட்டிங், பிராண்டிங், ஒழுங்கமைப்பு, விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட துறையில் அதிகரித்துவரும் புதிய நிறுவனங்களும் அவர்கள் சந்திக்கும் சவால்களும்’’ என்பதே இந்த ஆண்டு பார்மா சவுத் கண்காட்சிக்கான கருப்பொருள் ஆகும்.
கடந்த பல ஆண்டுகளாக பார்மா சவுத் கண்காட்சி ஒப்பந்த அடிப்படையில் மருந்துகளை தயாரித்து தரும் நிறுவனங்கள் மற்றும் அவுட் சேர்சிங் முறையில் மருந்து உற்பத்தி செய்ய நிறுவனங்களை தேடுவோர் ஆகியோருக்கு இடையே வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளன. இந்தாண்டுக்கான வாங்குவேர் -விற்பனையாளர் சந்திப்பு (பிடூபி) நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் அவுட்சோர்சிங், பிராண்ட் மேனேஜர்ஸ் மற்றும் முன்னணி சந்தையிடல் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
வர்த்தகம் அல்லாமல் பார்மா சவுத் கண்காட்சி மற்றும் மாநாட்டை முன்னிட்டு தொழில்நுட்பம், மேலாண்மை, சந்தையிடல் உள்ளிட்டவை குறித்து தனித்தனி கருத்தரங்க அமர்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. கே.ஞானதேசிகன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பார்மா சவுத் 2018 கண்காட்சியை தொடங்கிவைத்தார். தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டார். பார்மா சவுத் 2018ன் ஒருபகுதியாக நடைபெற்ற வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை இவர் தொடங்கிவைத்தார்.
இந்தாண்டு கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்தியுள்ளன. இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் வாங்குவோர் விற்போர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
தலைவர் திரு.ஜெயசீலன், செயலாளர் டி. சுரேஷ், பார்மா சவுத் தலைவர் எம்.ராஜரத்தினம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐடிஎம்ஏ முன்னாள் தேசிய தலைவர் எஸ்.வி.வீரமணியின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர்.
சந்தையிடல் மற்றும் நிர்வாகம் தொடர்பான துறைகளை சேர்ந்தவர்கள் இந்தகண்காட்சியில் பங்கேற்றால் அவர்கள் பிரபல மேனேஜ்மென்ட் குரு திரு.ஷிவ்கேராவின் சிறப்பு சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பை பெறுவார்கள். “ வெற்றியாளர்கள் பல்வேறு வகையான வேலைகளை செய்யமாட்டார்கள். செய்யும் வேலையை வித்தியாசமாக செய்வார்கள்’’ என்ற தiல்ப்பில் அவர் உரையாற்ற உள்ளார்.
நடப்பு சந்தைப்போக்குகள், மார்க்கெட்டிங் துறையில் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் பிராண்ட் பில்டிங் ஆகிய துறைகளில் கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு வர்த்தக பிரதிநிதிகள், மருந்துகட்டுப்பாட்டு அதிகாரிகள் என 3 ஆயிரம் பேர் இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.