ஐ.பி.எல். கிரிக்கெட்: டில் இருந்து மலிங்கா விலகினார்

_IPL-Cricket-Malinga-distortionஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மலிங்கா சில நாட்களுக்கு முன்பு அந்த அணியுடன் இணைந்தார். இங்கு மும்பை அணியின் மருத்துவ நிபுணர்கள் அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்தனர். இதில் அவரது காயம் குணமடைய குறைந்தது 4 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மலிங்கா ஐ.பி.எல். தொடரில் இருந்து நேற்று விலகினார். உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரிய டாக்டர்கள் நாளை மறுதினம் பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். இதன் பிறகே காயத்துக்கு ஆபரேஷன் செய்வதா? வேண்டாமா? என்பது முடிவு செய்யப்படும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (143 விக்கெட்) வீழ்த்தியவர் மலிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.