நாயகன் சசிகுமார் வசுமித்ராவிற்கு ஒரு வாரத்தில் சாக போகிறாய் என்று போன் செய்து மிரட்டுகிறார். வசுமித்ராவோ யார் போன் செய்து மிரட்டுகிறார் என்று தெரியாமல் குழம்பி பதட்டமாகிறார். சசிகுமார் மறுநாள் கடை எதிரில் நின்று வசுமித்ராவை முறைத்து பார்க்கிறார். தன்னை மிரட்டியது இவன் தான் என்று புரிந்துக் கொள்கிறார்.
நடுரோட்டில் சசிகுமார் வசுமித்ராவை கொல்ல முயற்சி செய்கிறார்.வசுமித்ரா தப்பித்து செல்கிறார். வசுமித்ராவை கொலை செய்ய பல முறை முயற்சி செய்து மரண பயத்தை ஏற்படுத்துகிறார். எதற்காக தன்னை கொலை செய்ய நினைக்கிறார், காரணம் என்ன என கண்டறிய நண்பர்கள் மூலமாக சசிகுமாரை பிடிக்க முயற்சிக்கிறார் வசுமித்ரா. சசிகுமாரும் வசுமித்ராவிடம் பிடிபடுகிறார்.
சசிகுமாரின் வாழ்க்கையில் என்ன நடந்தது? சசிகுமார் எதற்காக வசுமித்ராவை கொல்ல நினைக்கிறார்? காரணம் என்ன? வசுமித்ராவிடம் மாட்டி கொண்ட சசிகுமார், தப்பித்தாரா? என்பது அசுரவாதம் படத்தின் மீதிக்கதை.
சசிகுமார் ஆக்ஷனில் சீரியசாக அவருக்கே உரிய ஸ்டைலில் நடித்திருக்கிறார். போனில் பேசிக்கொண்டே சசிகுமார் கதறும் காட்சி சிறப்பு. நாயகி நந்திதாவும் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சசிகுமாரின் மகளாக வரும் அந்த சிறுமி அழகு. வசுமித்ரா வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் மருது பாண்டியன் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்ல நினைத்ததற்கு பாராட்டுக்கள். கோவிந்த் மேனனின் இசையில் பாடல்கள் ஓகே.
அசுரவதம் “மிரட்சி”