டிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம் – எடிட்டர் மோகன்

டிக் டிக் டிக் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய எடிட்டர் மோகன், டிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். சக்தி சௌந்தர்ராஜன் கனவை நிறைவேற்ற, கற்பனைக்கு உயிர் கொடுக்க பலர் இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நான் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன், இந்த படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி. ஜெயம் படத்தில் இருந்து இன்று வரை ரவியுடன் கூடவே இருந்து வருகிறார் மைக்கேல் மாஸ்டர். இசையமைப்பாளர் இமான் இந்தி படங்களுக்கும் இசையமைக்க வேண்டும்.

கதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார். இந்த காலத்துக்கு தேவையான கதை சொல்லல். ரவிக்கு 7 வயது இருக்கும்போதே ரவியின் திறமையை கண்டேன், 13 வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க வைத்தேன். மிகச்சிறப்பாக நடித்தான். மிருதன்  படத்தில் நடித்தபோது முதுகு தண்டில் அடி, அதன் பிறகும் இந்த கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்றார் எடிட்டர் மோகன்.