டிக் டிக் டிக் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இமான், ஒரு வருடத்தில் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒரு சில படங்களுக்கே வெற்றி விழா வாய்ப்பு அமைகிறது. அப்படி ஒரு படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் முதல் படம் என்ற ஆர்வத்தில் தமிழன் படத்தை நிறைய தடவை திரையரங்குகளில் சென்று பார்த்தேன். சமீப காலத்தில் நான் அதிக தடவை திரையரங்கில் சென்று பார்த்த படம் டிக் டிக் டிக் தான்.
இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவதற்கு முன்பே பின்னணி இசையை அமைத்ததால், முதல் முறையாக திரையரங்கில் போய் தான் நான் முழு படத்தையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது. டிக் டிக் டிக் எனது 100வது படம் என்று கார்டு போட்டபோது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. ஆனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. ஆரவ் 100 படங்கள் நடித்தாலும், அவர் நடித்த முதல் படத்தில் முதல் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் டி. இமான்.