சொந்த குரலில் பூமராங் படத்துக்காக டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்

ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. மேகா ஆகாஷ் தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் அவரின் ‘பூமராங்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் உங்களை வசீகரிக்கும்.

இயக்குனர் கண்ணன் திரைக்கதை எழுதும்போது, கதாபாத்திரங்களை உருவாக்குவதில் மிகவும் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர். மேலும், வேறு ஒருவரை டப்பிங் பேசவைத்து கதாபாத்திரம் முழுமையடையாமல் இருப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேச சொல்லி வலியுறுத்துவார். அவரது முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனாவை டப்பிங் பேச வைத்ததில் இருந்தே தெளிவாக தெரிந்தது. மேகா ஆகாஷும் இந்த லீக்கில் சேர்வார்.

இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள் அவளுக்கு டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் அதை செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது” என்றார்.

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் 2017 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இந்துஜா பார்வையாளர்களைக் கவரக்கூடிய ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஏராளமான திறமையாளர்களின் சங்கமமான இந்த “பூமராங்” நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.