தேனி மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து வைகோ இன்று பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:- தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் உட்பட யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவார்கள். தனியார் மருத்துவமனைக்கு போகக்கூடாது. தவறுகள் நிகழாமல் தடுக்க கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும். 6 கட்சிகள் இருக்கிறோம். ஒருவர் தவறு செய்தால் இன்னொருவர் மறிப்போம். 6 கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடமிருக்கும். எனவே செக்ஷன் பேலன்ஸ் என்பது நிச்சயமாக இருக்கும். இது தமிழ்நாடு இதுவரை பார்த்திராத ஒன்று. 10 நிமிடங்களில் திமுகவும், அதிமுகவும் ஒரு இடத்தில் பணம் கொடுத்து விடுவார்கள். நூதனமான முறையில் கொடுக்கிறார்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.