10 வயது பள்ளிச் சிறுமிக்கு நன்றி கடிதம் எழுதிய பிரதமர் மோடி

pm-modiஉத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தை சேர்ந்த 10 வயது பள்ளிச் சிறுமி அதிதி. இவர் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வரும் நலத்திட்டங்களை பாராட்டி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பிரதமர் மோடி தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிதியின் பாராட்டுக்களை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார். பிரதமர் மோடியிடம் இருந்து பதில் கடிதம் வந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுற்றார் அதிதி. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அதிதி அளித்த பேட்டியில் கூறுகையில், இந்தியாவிற்காக பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்து இருந்தேன். அவர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கருதுகிறேன். எனக்கு 11-ந்தேதி அவரது நன்றி கடிதம் கிடைத்தது. அவரிடம் இருந்து பதில் வரும் என நான் எதிர்பார்த்து இருந்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து எனது கருத்துக்களை பதிவு செய்து தொடர்ந்து கடிதம் எழுதுவேன் என தெரிவித்தார்.