Wattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்திய நடிகர் அபி சரவணன்

Wattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்திய நடிகர் அபி சரவணன்

ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில் ஹெல்த் (Wattle Health Australia). இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய உணவு வகைகளை (Wattle baby Apple Puree, Wattle baby Apple +Banana +Mango, Wattle baby Apple +Pear, Wattle baby Apple+Spinach+Broccoli & Pea) அறிமுகப்படுத்தியுள்ளது..முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது..
 
இந்த உணவு வகைகளை இந்தியாவில் முதன்முதலாக வாசுதேவன் & சான்ஸ் எக்ஸிம் பி லிட் நிறுவனத்தின் உரிமையாளர்களான கே.கே.வாசுதேவன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணு வாசுதேவன், விக்ரம் வாசுதேவன் ஆகியோர்  அறிமுகப்படுத்தியுள்ளனர்.. இதற்கான அறிமுக விழாவில்  கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன் இந்த புதிய குழந்தைகள் உணவு வகையை அறிமுகப்படுத்தி வைத்தார்.
 
இவர்களுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த Mr. Martin GLenister, Mr. Mark McCammon, Mr. Saumitra Sahai & Ms. Jenna carrigan ஆகியோரும் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்வின் மூலம் கிடைத்த தொகையை தான் தத்தெடுத்த  திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அன்னக்காமு , மோகன், ஐஸ்வர்யா, அஞ்சலி, ரேணுகா, சுபாஷினி, முத்துலட்சுமி  மற்றும்  பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான  அனுஷ்கா, ஸ்ரீதர், பிரவீன், சுமித்ரா மணிகண்டன்   ஆகியோர்களின் கல்விக்காக செலவிடப்போவதாக  அபி சரவணன் தெரிவித்தார்.