கோவில்பட்டி அருகே உலக சுற்றுசூழல் தினவிழா
தமிழகஅரசின் வனத்துறை,சுற்றுச்சூழல்துறை, தேசிய பசுமைப்படை சார்பில் ஊத்துப்பட்டி, குருமலை காப்பு காடுகளில் வைத்து உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜீன் 5 ம் தேதி இயற்கை வளங்களை பாதுகாக்க சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுற்றுச் சூழல் தினவிழா கடைப்பிடிக்கப்படுகிறது.
ஊத்துப்பட்டியில் நடந்த விழாவில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ- மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்று உற்பத்தி செய்தல் நடுதல், பராமரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.பின்பு மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம்.மாதம் ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்கவும், சுற்றுச் சூழலுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும், சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊத்துப்பட்டி கிராம முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
பின்பு குருமலை காப்பு காடு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.பின்பு மரக்கன்றுகளை நட்டனர்.விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார்.நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமைஆசிரியர் சூரியபிரம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் நடுநிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் அருள்காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுஉற்பத்தி செய்தல் குறித்த பயிற்சி அளித்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன், வனவர்கள் ஆனந்த், முருகா, வன காவலர் பூலோகஆழ்வார், நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பிருந்தாதேவி, விஜயபொன்ராணி, கனகலட்சுமி, சங்கரேஸ்வரி, ராமச்சந்திரன், முத்துச்செல்வி ,உடற்கல்வி ஆசிரியர் தாமோதரன் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்; மணி, கீதாசக்திவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள், மாணவ – மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.