இயக்குனர் விக்கி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவுக்கு மிரட்டல்?
டிராஃபிக் ராமசாமியின் சர்ச்சைக்குரிய பாடல் – இயக்குனர் விக்கி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவுக்கு மிரட்டல்?
மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.