கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட தீப்பெட்டி தொழிலாளார்கள்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட தீப்பெட்டி தொழிலாளார்கள்

கோவில்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 20சதவீத கூலி உயர்வு வழங்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 150 தீப்பெட்டி கொண்ட ஒரு வில்லைக்கு 5 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ரூபாய் கூலி உயர்த்தப்பட்டு, 6 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட கூலியை வழங்கமால் மீண்டும் பழைய கூலியான ரூ.5 வழங்குவதாகவும், எனவே உயர்த்தப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி தீப்பெட்டி தொழிலாளர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலூகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி, நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம்,பரமராஜ், அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.