வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்

வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்
புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட  புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம்  கட்ட படப்பிடிப்பு  கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம் பெயர்த்துள்ளார் இயக்குனர்.
 
இதில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.