தமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் ’பஞ்சுமிட்டாய்’

தமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் “பஞ்சுமிட்டாய்”
தமிழ் சினிமா எவ்வளவோ வித்தியாசமான கதைக்களங்களை பார்த்துள்ளது. கிரைம், ஆக்ஷன், திரில்லர், ஹாரர், குடும்பத்திரைப்படம், வரலாற்றுத்திரைப்படம், காவியத் திரைப்படம், மாயாஜாலத்திரைப்படம் என எவ்வளவோ ஜானர்களைக் கண்டுள்ளது. 
எனினும் புதுப்புது இயக்குனர்களால் புதுப்புது ஜானர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள ’பஞ்சுமிட்டாய்’ முற்றிலும் புதிய ஜானராக வரும் June 1 அன்று வெளிவரவிருக்கிறது.
அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்க, ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
நாயகனுக்கும் நாயகிக்குமான கணவன் மனைவி உறவில் நிற மாயத்தால் ஏற்படும் சிக்கலை சுவைபடச் சொல்லியிருக்கும் இப்படம் ‘மேஜிக்கல் ரியலிஸம்’ எனபடும் மாய எதார்த்தத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.