போராட்டமே வேண்டாம் என்பது ரஜினியின் கருத்து அல்ல – ரஞ்சித்
கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். ஜீன் 7 ஆம் தேதி காலா திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. சிவகங்கையில் நடைபெற்ற ஒரு போராட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பா. ரஞ்சித்திடம் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கி சூட்டூக்கு காரணம் என ரஜினிகாந்த் பேசியது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ரஞ்சித் கூறியதாவது, இன்று காலையில் கூட ரஜினி சாரிடம் பேசினேன். போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல. தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. நான் இப்போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.” என் கூறினார்.