வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் ஸ்ட்ரைக்

வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் ஸ்ட்ரைக்

5 வருடங்களுக்கு ஒருமுறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 2 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஊதிய உயர்வு போதாது, எனவே உடனடியாக ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 10 மணி முதல் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். நாளை மாலை வரை இந்த போராட்டம் தொடர இருக்கிறது. இதனால் வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏடிஎம்-இல் பணத்தட்டுப்பாடு நிலவும் என கூறப்பட்ட நிலையில், தேவையான அளவுக்கு ஏடிஎம்-இல் பணம் வைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.