மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவானது

EARTH QUACK IN AMERICA
மத்திய அமெரிக்காவின் கவுதமாலா நாட்டில் பசுபிக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோவிற்கு கீழே உள்ள நாடு கவுதமாலா. கவுதமாலா நாட்டில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கவுதமாலா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 217 கிலோமீட்டர் பாய்ச்சலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மெக்ஸிகோ நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறுகையில் கவுதமாலாவின் எல்லைப் பாதுகாப்பு பகுதியில் உள்ள சியாபாஸ் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.