கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி 27வது நினைவு தினம் நாடுமுழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. கோவில்பட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி காந்திமண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி, பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், பிரேம்குமார்,மகேஷ்குமார் மாவட்ட துணைத்தலைவர் திருப்பதிராஜா, ராமசந்திரன் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி.பிரிவு தலைவர் மாரிமுத்து நகர தலைவர் சண்முகராஜ் துணைத்தலைவர் பிச்சைகனி, ராமசந்திரன், ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நகர வட்டார இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.