படர்ந்தபுளியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

படர்ந்தபுளியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் கனர வங்கி சுழல் கோப்பைக்கான 15வது ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது.

போட்டிகளுக்கு கனரா வங்கி தூத்துக்குடி மண்டல உதவி பொது மேலாளர் கே. மகேந்திரன் தலைமை வகித்தார்.
எட்டயபுரம் திருப்பதி கேஸ் பியூஸ் சர்வீஸ் நிர்வாகி வி. சீனிவாசன், எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள், எழுத்தாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, ராமநாதமபுரம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தலைச்சிறந்த கைப்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. முதல் நாளான நேற்று தொடங்கிய முதலாவது ஆட்டத்தில் திருச்சி பிஷப் கீப்பர் அணியும், தருவைகுளம் செயின்ட் மைக்கேல் அணியும் விளையாடின. இதில் 25 க்கு 18 என்ற நேர்செட் கணக்கில் திருச்சி பிஷப் கீப்பர் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பகல், இரவு ஆட்டங்களாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம், லியா கைப்பந்து கழகம் மற்றும் படர்ந்தபுளி கிராம மக்கள் செய்துள்ளனர்.