தேர்தலில் ராதிகா
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கு “கில்டு” எனப்படும் சினிமா சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சிறு படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். சில ஆண்டுகளாக இந்த சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முடிவெடுக்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷாவை நீதிமன்றம் நியமித்தது. கடந்த 7ஆம் தேதி இந்த சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில், சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் ஜூன் 10ஆம் தேதி சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் சங்கத் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில், ராடான் மீடியா நிறுவனத்தின் சார்பில் பல தொலைக்காட்சித் தொடர்களைத் தயரித்துள்ள நடிகை ராதிகா உறுப்பினராக இருக்கிறார். அவர் இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.