பிரபாஸ் உடன் இணையும் அருண் விஜய்

பிரபாஸ் உடன் இணையும் அருண் விஜய்

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும்  ‘சாஹோ’ தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக உருவாகிறது.  தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த நாயகன் பிரபாஸ், ‘பாகுபலி’ யின் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார். தற்போது அவர், ‘சாஹோ’ என்கிற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்து வருகிறார்.

சுஜீத் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக வருகிறார். எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக அபுதாபியில் நடந்து வரும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பில்,  தற்போது  அருண் விஜய்யும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய், பிரபாஸ் உடன் வில்லனாக மோதுகிறார். 

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை முடித்ததோடு,  இப்படத்தில் இணைந்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்திற்கு சங்கர்-எஸான் லாய் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார்.