சன்னி லியோனுக்காக வெளியிடபட்ட ஸ்பெஷல் போஸ்டர்
இளைஞர்களை கவர்ச்சியான நடிப்பின் மூலம் கவர்ந்திருப்பவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பல மொழிகளில் உருவாகும் பீரியட் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் வடிவுடையான் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு தமிழில் ‘வீரம்மா தேவி’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வாழ்ந்த வீர மங்கை வீரம்மா தேவியை மையமாக வைத்து இதனை இயக்குவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதில் நடிப்பதற்காக வாள் சண்டை உட்பட பல பயிற்சிகளில் சன்னி லியோன் ஈடுப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சன்னி லியோனின் பிறந்தநாளில், ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள், வீரம்மா தேவி படக் குழுவினர். அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே 18-ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.