பலத்த இடி, மின்னலுடன் கோவில்பட்டி பகுதியில் ஆலங்கட்டி மழை
கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒருவார காலமாக பகலில் பலத்த வெயில் அடித்தாலும், அவ்வபோது மாலையில் லேசான மழைச்சாரலும் பெய்து வந்தது.இந்நிலையில் இன்று மாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல மழை ஆலங்கட்டி மழையாக மாறியது, சின்ன, சின்ன பனிக்கட்டிகளாக மழை பெய்ததது. சுமார் 1மணி நேரம் வரை தொடர்ச்சியாக பலத்த மழை பெய்த காரணத்தினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அதிகம் வெப்பத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.