அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா
ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார். கோயில் திறக்கப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார்.
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது. அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்..
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள். அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை..
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.