ஐ.பி.எல். போட்டிகள் இடம் மாற்றப்பட்டதால் பிரபல வீரர்கள் அதிருப்தி

ragulஐ.பி.எல். போட்டிகளை இடம் மாற்றம் செய்வது குறித்து ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய 3 மைதானங்களில் நடக்கிறது.இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மராட்டிய மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டிகளை மாற்ற வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இது தொடர்பாக விவாதிக்க ஐ.பி.எல். நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் மும்பை, புனே அணி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை இடம் மாற்றம் செய்வது குறித்து ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.டிராவிட் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு என்பது முக்கிய பிரச்சினைதான். ஆனால் அதை ஐ.பி.எல். போட்டியோடு தொடர்பு படுத்துவது தவறானது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருந்திருந்தால் நாம் கிரிக்கெட் போட்டியை நிறுத்தலாம்.இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டி மீது குறிவைக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டாக மராட்டிய மாநிலத்தில் குறைவான மழை பெய்து இருக்கிறது. போட்டிகளை மாற்றுவதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா? விவசாயிகளுக்கு நீண்டகால தீர்வு தான் முக்கியம் என்றார்.