வைரமுத்து எழுதிய பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய மும்பை அழகி 

அருவாசண்ட” படத்திற்காக வைரமுத்து எழுதிய  ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “அருவா சண்ட” படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய

“இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி..

இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு

ஜி எஸ் டி இல்ல உனக்கு”

என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு  பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. “எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெளப்பும் பாடலாக  பாடல் உருவாகி இருக்கிறது.     

தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய,சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். ஸ்டண்ட்: தளபதி தினேஷ்.

ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் சௌந்தர்ராஜா,கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்

கபடி, கௌரவக் கொலை பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் அருவாசண்ட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும் என்பது நிச்சயம் என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.