விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள சிவசங்குபட்டியை சேர்ந்த ராமையை என்பவரது மகன் மாரியப்பன்(62). இவருக்கு சுமார் 2 ஏக்கரில் தோட்டம் உள்ளது. தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த காற்றுவுடன், மழை பெய்து உள்ளது.இதில் மாரியப்பன் தோட்டத்தில் இருந்த வாழைகள் அனைத்து சேதமடைந்தன.
சுமார் 2லட்சத்திற்கு மேல் செலவு செய்து, வாழைகள் சேதமடைந்த காரணத்தினால் மனவேதனையுடன் காணப்பட்ட விவசாயி மாரியப்பன், தோட்டத்தில் இருந்து பூச்சி மருந்தினை குடித்து உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பனுக்கு கருப்பாயி என்ற மனைவி மட்டும் உள்ளார். குழந்தைகள் இல்லை, சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.