அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக “எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில், R.K.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவானன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.
தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், எழுத்து – எம். எம்.எஸ். மூர்த்தி, இயக்கம் – ராஜ் சேதுபதி. இத்திரைப்படத்தை J.K.Film Productions வும் May -1 Global Media வும் இணைந்து தயாரித்துள்ளனர்.