தமிழ் திரையுலகத்தில் தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு திடீரென சிம்பு வந்தார். சிம்புவின் வருகையை பலரும் பாராட்டினர்.
சிம்பு பேசும்போது, தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் பிரச்சினை சரியாகாது. நான் இலவசமாகக் கூட நடித்துக் கொடுப்பேன்.
நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். அப்போதுதான் ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கும் தெரியும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று கூறியுள்ளார். ஹீரோக்கள் அதிக சம்பளம் கேட்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகிறது என்று ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில், சிம்புவின் இந்த எதிர்பாராத பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.