சசிகலாவுக்கு, நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வருகிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இதனை அடுத்து சசிகலா தரப்பில் பரோல் கேட்டதற்கிணங்க 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு பலத்த வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளி வந்துள்ள சசிகலா, நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தஞ்சாவூர் செல்கிறார். கடந்த முறை சசிகலா பரோலில் வெளிவந்த போது என்னென்ன விதிமுறைகள் இருந்ததோ அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என சிறை நிர்வாகம் சசிகலாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.