தவறுக்கு வருத்தம் தெரிவித்தேன் – நடிகர் கமல்ஹாசன்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை நடிகர் கமல்ஹாசன் சந்தித்ததார்.  அவர் இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர் செய்த ட்வீட்டில், “கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ‘டன்கிர்க்’ படத்தை, திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். எனது தவறுக்கான பிராயச்சித்தமாக, ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன். அவர் நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தைப் அவர் பார்த்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். இவர்களின்  சந்திப்பு மும்பையில் நடந்தது. கோடக் நிறுவத்தின் கிளைத் திறப்பு விழாவுக்காக, பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது குடும்பத்தினரோடு இந்தியா வந்துள்ளார். இவரது டன்கிர்க், இந்த ஆண்டு மூன்று ஆஸ்கர்களைப் பெற்றுள்ளது.