வியாழக்கிழமை (மார்ச் 1) முதல் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், குறிப்பிடும்படியான தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சார்ந்த ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டு மொத்தமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது. திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும் அந்த திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிககைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம். இந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகள் இயங்கும்