சென்னையில் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்த படத்திற்காக ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குப்பத்துப் பாடலை சென்னையில் படமாக்கியுள்ளனர். இது விஜய்யின் அறிமுக பாடல் என்று சொல்லப்படுகிறது. சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக படககுழுவினர் கொல்கத்தா பயணமாகவுள்ளனர். அங்கு சுமார் 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், அதி பயங்கர ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.