இயக்குனர் பிரியதர்ஷனுடன், உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் நிமிர். போட்டோக்ராபராக எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் அமைதியான இளைஞராக வலம் வரும் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நாயகன் உதயும், அவருடன் படித்த பார்வதி நாயரும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் பார்வதி நாயரின் அப்பா வசதியான மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய நினைக்கிறார். அதனை உதயிடம் சொல்லிவிட்டே செய்கிறார்.
இச்சமயத்தில் உதயநிதி தன் ஸ்டுடியோவுக்கு அருகில் நடக்கும் சண்டையை சமாதானம் செய்யும் முயற்சியில் சமுத்திரக்கனி அடித்து புரட்டி எடுத்து விடுகிறார். அதில் உதயின் செருப்பு, வேட்டி எல்லாம் பறிபோய் அவமானப்படுகிறார். அந்த கோபத்தில் தன்னை அடித்த சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமெடுக்கிறார். அதே நேரத்தில் சமுத்திரக்கனியின் தங்கை என தெரியாமலே நமிதா ப்ரோமோத்திடம் நட்பாகி காதலாகிறார் உதயநிதி. உதய் சமுத்திரக்கனியை திருப்பி அடித்தாரா? அவரது தங்கை நமிதா ப்ரோமோத்துடனான காதல் திருமணத்தில் முடிந்ததா? என்பதே நிமிர் படத்தின் மீதிக்கதை.
உதயநிதி கிராமத்து இளைஞராக மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். பார்வதி நாயரும் படம் முழுக்க வந்து அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளைக்கு பிறகு வந்தாலும் நமீதா பிரமோத் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். கருணாகரன், இமான் அண்ணாச்சி, சமுத்திரக்கனி, எம் எஸ் பாஸ்கர், கஞ்சா கருப்பு, துளசி, அருள் தாஸ் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்