விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காளி’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான போஸ்டருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் இப்படத்தின் எல்லா பாடல்களும் அசத்தலாக அமைந்துள்ளன எனக்கூறப்படுகிறது.’காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுத்துள்ளது. இப்படத்தின் விளம்பர யுக்திகளை இப்பாடல் வெளியீட்டின் மூலம் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளனர் .இப்படத்தை ‘Vijay Antony Film Corporation’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு action படமாகும்.
