காங்கிரஸ் கட்சியினர் மத்தியரசினை கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் முன்பு தலித் மக்களுக்கு எதிராக மத்தியரசு தொடர்ந்து விரோதப்போக்கினை கடைபிடித்து வருவதாக கூறி, மத்தியரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சி எஸ்.சி.பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் மகேஸ், உமாசங்கர், சண்முகராஜ், காங்கிரஸ் கட்சி நகரத்தலைவர் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.