கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அகில இந்திய டி.டி.வி.தினகரன் பேரவை சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் அமோக வெற்றி பெற்று பதவி ஏற்றதை கொண்டாடடும் வகையில் இரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்;ச்சிக்கு அகில இந்திய டி.டி.வி.தினகரன் பேரவை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட அம்மா பேரவை தலைவர் நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் இனாம்மணியாச்சி மாரிமுத்துபாண்டியன், தொழில் அதிபர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தான். இரத்த தான முகாமினை அதிமுக அம்மா அணி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிளை செயலாளர் அங்குசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசங்கர், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ரஞ்சித், தங்கராஜ், ரவி, கணேசமூர்த்தி, பிரவின்குமார், அருண்குமார், துரை, கண்ணன், ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்