கோவில்பட்டி ஒன்றிய நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற ஆலோசனைக்கூட்டம் லாயல்மில் காலனியில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர தலைமை ரஜினி ரசிகர்மன்ற தலைவர் முருகன் தலைமை வகித்தார். நகர தலைமை ரஜினி ரசிகர்மன்ற செயலாளர் பாலமுருகன் (எ)மகேஷ்பாலா, நகர பொருளாளர் ராஜமனுவேல், துணைத்தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டதில் பதிவு செய்யாத ரசிகர்மன்றங்கள் பதிவு செய்வது தொடர்பாகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. இதில் மார்க்கெட்.பாண்டி, விஜய்ஆனந்த், மணி, தெற்கு திட்டங்குளம் எஜமான் ரசிகர் மன்றம், கயத்தார் ஒன்றிய பணக்காரன் ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றம், புதூர் ஒன்றிய தர்மத்தின் தலைவன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்பட திரளான ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைமை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினிசெல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இறுதியில் தங்க மாரியப்பன், பாஸ்கர் (முத்து வீரா ரசிகர் மன்றம்) ஆகியோர் நன்றி கூறினர்.