திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் முத்தலாக் தொடர்பான மசோதாவை எதிர்க்கவில்லை. இதை பாராளுமன்ற குழுவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. முத்தலாக் விவகாரத்தில் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு சிவில் பிரச்சனையை கிரிமினல் பிரச்சனையாக மாற்றுவதை திமுக எதிர்க்கிறது. இதில் பேச்சுவார்த்தை நடத்தி சில மாற்றங்களை கொண்டு வரப்பட வேண்டும் என எல்லா எதிர்கட்சிகளும் ஆதரிக்கிறது. பாராளுமன்றம் அதிகமாக நடக்கவில்லை என்பது தான் பிரச்சனை. பாராளுமன்றத்தில் இதை எழுப்ப வாய்ப்பே கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.