தங்கம் தந்த ரஜினி

அருவி’. அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருந்த  இப்படம் கடந்த வாரம் வெளியானது. சமூக பிரச்னைகளை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்வதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் ஹீரோயினாக அதிதி பாலன் என்பவர் அறிமுகமாகியிருந்தார். பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் இணைந்து இசையமைத்திருந்த இப்படத்துக்கு ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷாங்காய், டெல்லி, மும்பை, பஞ்சாப் மற்றும் கேரளாவில் நடைபெற்றதிரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற இந்தப் படம், ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்துடன், உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் ‘அருவி’ படத்தை மனம் திறந்து பாராட்டியும், தங்களது ட்விட்டர் பக்கங்களில் புகழ்ந்து ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமும் உள்ளனர். சமீபத்தில், இப்படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு போன் செய்து ‘அருவி’ டீமை வெகுவாக பாராட்டியிருந்தார். தற்போது, இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த நாயகி அதிதி பாலனுக்கும், இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கும் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசளித்துள்ளார்.