சன்னி லியோன் கதாநாயகியாக முதல்முறை நடிக்கிறார். வடிவுடையான் இயக்கத்தில், பழங்கால அரசர் கதையை மையமாக கொண்ட படம் இது. அதனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் ஏகிறலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தற்போது சன்னி லியோனுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அம்மணி, 2.5 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். அதற்கு தயாரிப்பாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிகிறது. தமிழில் சக்கை போடு போட்டுவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கூட இதே சம்பளம் தான் வாங்குகிறார். இதனாலேயே, சன்னியின் இந்திய மார்க்கெட்டை மொத்தமாக குறிவைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளாராம். 4 மொழிகளில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. சன்னி லியோனும், வாங்கிய சம்பளத்திற்கு ஏற்றவாறு, இப்போதே வாள் சண்டை, கத்தி சண்டையெல்லாம் கற்றுக் கொள்ள துவங்கி விட்டாராம்.